உள்ளூர் செய்திகள்
கீழ் அரசம்பட்டில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் பாய்ந்து சென்ற காட்சி.
கீழ் அரசம்பட்டில் மாடு விடும் திருவிழா
- 100 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது
- இளைஞர்கள் ஆரவாரம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டில் பொங்கல் பண்டிகையொட்டி எருது விடும் விழா இன்று நடந்தது. விழாவுக்கு சப்- கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.
தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஷீலா வரவேற்றார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் மற்றும் சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன.
காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
சீறி பாய்ந்தது ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.