உள்ளூர் செய்திகள்

வேலூர் கொணவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார்.

வேலூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-08-07 09:07 GMT   |   Update On 2022-08-07 09:07 GMT
  • 982 இடங்களில் நடந்தது
  • கொணவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், உயிர் இழப்பை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோணா தடுப்பூசி முகாம்

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொது மக்கள் அதிக அளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மார்க்கெட் பகுதி என இன்று 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

வேலூர் கொண வட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார், உதவி கமிஷனர் பிரபு ஜோசப், தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர் முருகன் முப்படை பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News