வேலூரில் காங்கிரசார் பாதயாத்திரை சென்ற காட்சி.
வேலூரில் காங்கிரசார் பாதயாத்திரை
- வேலூர் கோட்டை முன்பு நாளை நிறைவு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாநகர காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை இன்று நடந்தது. வேலூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தில் பாதயாத்திரை தொடங்கியது.
மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். பாதயாத்திரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரகு, மண்டல தலைவர் கப்பல் மணி, தங்கமணி புருஷோத்தமன், துளசிராமன், பாலகிருஷ்ணன், திருமால், ஜார்ஜ், கணேஷ், இ.பி.காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை, பாகாயம், தொரப்பாடி வழியாக பாதயாத்திரை சென்றனர். வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பு நாளை பாதயாத்திரை நிறைவடைகிறது.
பா.ஜ.க. ஆட்சியினால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
பெட்ரோல் விலை வேலையில்லா திண்டாட்டம் பொருளாதார பேரழிவு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பா.ஜ.க.வே வெளியேறு என்று கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.