உள்ளூர் செய்திகள்

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசிய கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன்

வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்

Published On 2023-06-01 09:32 GMT   |   Update On 2023-06-01 09:32 GMT
  • நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்ட வகுப்பு, பொதுமக்களிடம் அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள்
  • 7 மாத பயிற்சி நடக்கும்

வேலூர்:

தமிழகத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு 2-ம் நிலை பெண் காவலர்களுக்கான தேர்வு நடந்தது.

இதில் வேலூர் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ராமநாதபுரம் சிவகங்கை திருவாரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 273, 2-ம் நிலை பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்களுக்கு வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இன்று பயிற்சி வகுப்பு தொடங்கியது.

பயிற்சி கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் துணை முதல்வர், துணை முதல்வர் முருகன் ஆகியோர் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தனர்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண் போலீசாருக்கு நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்ட வகுப்பு, பொதுமக்களிடம் அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் 6 மாதம் நடைபெற உள்ளது.

இைதயடுத்து பயிற்சி முடித்த பெண் காவலர்கள் ஒரு மாத காலம் போலீஸ் நிலையங்களுக்கு சென்று பயிற்சி பெறுவார்கள்.

7 மாத பயிற்சி முடித்த பெண் காவலர்கள் போலீஸ் நிலையத்தில் பணி அமர்த்தபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News