உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

வேலூர் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-04-17 09:24 GMT   |   Update On 2023-04-17 09:24 GMT
  • ஒரு மணி நேரம் நடந்தது
  • பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 22 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 27-ந் தேதி 7 பேர் அங்குள்ள கட்டிடத்தின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்த மின்விசிறி, டேபிள், சேர், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார். அன்று இரவே அங்கு பணியில் இருந்த வார்டன்களை சரமாரியாக தாக்கி விட்டு சுவரேறி குதித்து தப்பி சென்றனர். போலீசார் அவர்கள் தேடி பிடித்தனர். ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார்

கடந்த வியாழக்கிழமை 5 சிறுவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி சென்றனர். அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகம் அருகே மடக்கிப்பிடித்து ஒப்படைத்தனர்.

சிறுவர்கள் அடிக்கடி தப்பிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உதவி கலெக்டர் கவிதா தாசில்தார் செந்தில் டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இன்று காலை சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு சென்றனர்.

அப்போது அங்குள்ள சிறுவர்களுக்கு கலெக்டர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். இது வழக்கமான ஆய்வு தான் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News