குடியாத்தத்தில் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கேக் இனிப்புகளை காவலர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கினார்.
கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்து
- குடியாத்தத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. செல்போன்களில் வாட்ஸ் அப் பேஸ்புக் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வேலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே காவல்துறை சார்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக்குகளை வெட்டினர்.
மேலும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பொதுமக்களும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு வாழ்த்துக்களை கூறினர். பொதுமக்கள் பலர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுடன் செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கர், குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் நடந்த புத்தாண்டையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக் வெட்டினார்.
டி.எஸ்.பி. பழனி, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் சார்பில் புத்தாண்டு நிகழ்ச்சி நடந்தது இதில் போலீஸ் பிரிண்டர் ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது இரவு பகல் பாராமல் பணியாற்றும் போலீசாருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் ஆண்டில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், டி.எஸ்.பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கவுன்சிலர் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.