பழுதடைந்த பயணிகள் தங்கும் விடுதியை கலெக்டர் ஆய்வு
- புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டி டங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது
- வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும்
வேலூர்:
கண்ணமங்கலம் கூட்ரோட்டில், கீழ்ப்பள்ளி ப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடத்தில் பயணிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது.
தற்போது புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டி டங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது.
வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தை இணைக்கும் சாலையாக உள்ள, இந்த கண்ணமங்கலம் கூட்ரோட்டில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
3 வழிதடங்களை இனைக்கும் இந்த இடத்தில் பயணிகளின் நலன் கருதி, பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிதாக பயணிகள் தங்கும் விடுதி கட்டிடம் கட்ட வேண்டு மென பொதுமக்கள் கலெக்டர் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி பழுதடைந்த பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் கூறுகையில்:-
பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்ப தோடு, வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் தேவி சிவா, ஊராட்சி மன்ற தலை வர்கள் சிவகுமார், விஜய பாஸ்கர், கண்ண மங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தாசில்தார் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.