உள்ளூர் செய்திகள்

வேலூரில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து

Published On 2022-08-13 14:49 IST   |   Update On 2022-08-13 14:49:00 IST
  • கடுமையான போக்குவரத்து பாதிப்பு
  • போலீசார் விசாரணை

வேலூர்:

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேலூர் கொணவட்டம் மேம்பாலம் அருகே நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பிகளை மோதிவிட்டு எதிர்சாலைக்கு சென்றது.

அப்போது அந்த சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

உடனடியாக இதை பார்த்த பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் டிரைவர் லாரியை நிறுத்தினார். அப்போது அதன்பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது மோதியது.

அடுத்தடுத்து கார்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நடந்த போது அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News