இந்திய மாணவர்கள் ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டங்களை படிக்க முடியுமா?
- பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி
- பாடப் பகுதிகள் ஒரே மட்டத்தில் கூட்டாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் திட்டமாகும்.
வேலூர் :
பாராளுமன்றத்தில் வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த் பேசியதாவது:-
வெளிநாடுகளில் உயர்கல்வி பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, (நாடு வாரியாக) அளிக்க ? உள்நாட்டிலேயே அதிக மாணவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடர ஒன்றிய அரசு ஏதேனும் விரிவான கொள்கையை வகுத்துள்ளதா?
மேலும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் இரட்டைப் பட்டங்களை இந்திய மாணவர்கள் தனித்தனியாகவும் ஒரே நேரத்தில் படிக்க முடியுமா?
ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டங்களுக்கும் இரட்டைப் பட்டப்படிப்பு வழங்கப்படுமா? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன ?
இதற்கு மத்திய கல்வி மந்திரி டாக்டர் சுபாஸ் சர்க்கார் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார்.அதில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் நமது இந்திய மாணவர்களின் விவரங்கள் மற்றும் தரவுகள் ஏதும் தங்களிடம் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
மேற்கூறிய விதிமுறைகளின் விதிகளின் கீழ், " இரட்டைப் பட்டப்படிப்பு திட்டம் " என்பது இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களால் ஒரே துறைகள், பாடப் பகுதிகள் மற்றும் ஒரே மட்டத்தில் கூட்டாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் திட்டமாகும்.
இந்திய மாணவர்கள் வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து பெற வேண்டிய மதிப்பெண் மற்றும் இந்திய நிறுவனங்களில் இருந்து வெளிநாட்டு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வழக்கமான முறையில் பெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.