உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
ஏ.சி.யில் ஏற்பட்ட தீ விபத்தில் புத்தகங்கள் எரிந்து நாசம்
- தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
- மின் கசிவால் ஏற்பட்டது
வேலூர்:
காட்பாடி பர்னீஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லப்பின் ஜோனகன். இவரது வீட்டில் நேற்று காலை ஏ.சி. ஓடிக்கொண்டிருந் தது. அப்போது திடீரென அதில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி அருகே வைக்கப்படிருந்த புத்தகங்கள் மீது பிடித்து எரிந்துள்ளது.
இதை பார்த்து ஜோனகன் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஏ.சி. சுவிட்சை அணைத்தனர்.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பால்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.