வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
வேலூரில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்
- தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது
- 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் தி.மு.க. அரசை கண்டித்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கார்த்தியாயினி பங்கேற்று பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், வணிக பிரிவு மாநில செயலாளர் இளங்கோ, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பிச்சாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாபு, ஜெகன், மகேஷ்.மாவட்ட பொருளாளர் தீபக் மாவட்ட நிர்வாகிகள் சரவணன், மணி, யுவராணி, சுகுணா.லோகேஷ், சுகுமார். செல்வி.சாந்தி, வேலூர் மாநகர் மண்டல தலைவர்கள் யுவராஜ் சிவக்குமார், சிவா.ரவி.சுரேஷ், சரவணன், நாகராஜ், சத்திஷ், மற்றும் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.