உள்ளூர் செய்திகள்

வேலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-06 08:58 GMT   |   Update On 2022-08-06 08:58 GMT
  • அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஏ. ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆல்வின், உழைக்கும் பெண்கள் மாவட்ட செயலாளர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். கட்டணம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும்.

மாணவி ஸ்ரீ மதியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் தேவதாஸ் கவுரவத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News