ஊழல் புகார் கொடுத்த வாலிபர் மீது தாக்குதல்
- கலெக்டர் அலுவலகத்தில் புகார்
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். காட்பாடி அருகே உள்ள கொடுக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் ஊராட்சி செயலாளர் மீது நான் ஊழல் தொடர்பான புகார் அளித்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று என்னை புகாரை வாபஸ் பெற கோரி மிரட்டி கும்பல் ஒன்று அடித்து தாக்கினர். என்னையும் என் குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கின்றனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த சீத்தம்மாள் (76) என்பவர் காட்டுப்புத்தூர் கிராமத்தில் தனது பெயரில் உள்ள சொத்தை பாகப்பிரிவினை செய்யவிடாமல் மறுக்கும் மகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.