உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-05-14 13:43 IST   |   Update On 2023-05-14 13:43:00 IST
  • எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை
  • 85 வாகனங்கள் பறிமுதல்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தொடர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 லாரிகள், 1 பொக்லைன், 14 டிராக்டர், 49 மாட்டு வண்டிகள் என மொத்தம் 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், கடத்தப்பட்ட 37 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேல்பாடி அருகே பொன்னையாற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள் மற்றும் விருதம்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு மாட்டு வண்டியை போலீசார் நேற்று பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

எச்சரிக்கை

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News