உள்ளூர் செய்திகள்

அரக்கோணம், காட்பாடி ரெயில் நிலையத்தில் பிளாட்பார கட்டணம் உயர்வு

Published On 2022-10-02 14:21 IST   |   Update On 2022-10-02 14:21:00 IST
  • ரூ‌10-ல் இருந்து ரூ.20-ஆக அதிகரித்தது
  • தெற்கு ெரயில்வே அறிவிப்பு

வேலூர்:

அரக்கோணம், காட்பாடி ரெயில் நிலையத்தில் பிளாட்பார கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் காட்பாடி, சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் ஆவடி ஆகிய ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் ரூ‌10-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்துவதாக தெற்கு ெரயில்வே அறிவித்தது.

இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. திடீரென கட்டண உயர்வு அதிகரித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரக்கோணம், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு உறவினர்களை வழியனுப்ப வந்தவர்கள் கட்டண உயர்வு காரணமாக அதிருப்தி அடைந்தனர்.

Tags:    

Similar News