உள்ளூர் செய்திகள்

வேலூர் பிராமணர் சங்கத்தின் சார்பில் பரதநாட்டிய கலைஞருக்கு பாராட்டு விழா நடந்த போது எடுத்த படம்.

பரதநாட்டிய கலைஞருக்கு பாராட்டு விழா

Published On 2023-03-31 15:25 IST   |   Update On 2023-03-31 15:25:00 IST
  • வேலூர் பிராமணர் சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் பிராமணர் சங்கத்தின் சார்பில் பரதநாட்டிய கலைஞருக்கு பாராட்டு விழா மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் விழா நேற்று சத்துவாச்சாரியில் நடைபெற்றது.

விழாவிற்கு வேலூர் பிராமணர் சங்கத்தின் கிளைத் தலைவர் ஆர். மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் மாலதி சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். பொருளாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வேலூர் கிளை பிராமணர் சங்கத்தின் ஆலோசகர் அ. சத்தியமூர்த்தி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

மாவட்ட அளவில் சிறந்த பரதநாட்டிய கலைஞருக்கான சிறப்பு விருது, பொற்கிழி மற்றும் கலை வளர்மணி என்ற பட்டம் பெற்ற செல்வி. ர. வர்சிதா என்பவரது திறமையை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில், வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் பாராட்டுச் சான்று மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. செய்தி தொடர்பாளர் க.ராஜா நன்றி கூறினார்.

Tags:    

Similar News