சத்துவாச்சாரி வள்ளலார் நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- ‘நினைத்தாலே இனிக்கும் 93’ எனும் தலைப்பில் நடந்தது
- தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்
வேலூர்:
சத்துவாச்சாரி வள்ளலார் நடுநிலைப் பள்ளியில் 1985-1993-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று வேலூர் முஸ்லிம் அரசு பள்ளி அருகே உள்ள டார்லிங் ரெசிடென்சி ஓட்டலில் 'நினைத்தாலே இனிக்கும் 93' எனும் தலைப்பில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலைமை ஆசிரியர் பருவதராஜன் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் இந்தராணி, ஜெயராகிணி, நவநீதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர்கள் இளையராஜன், பூபதி, லட்சுமணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் ஒன்று கூடிய சுமார் 50 முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பள்ளி காலத்தில் நடந்த சுவாரசியமான நினைவுகளை பேசி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் பள்ளிப் பருவ கால புகைப்படங்கள் குறித்து திரையிடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மேலும் அப்போது பணியாற்றிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவபடுத்தினர்.
இதில் ஜாய், நளினி, சுபாஷிணி, ரம்யா, சவீதா உள்பட குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
சமூக சேவை செம்மல் சுரேஷ் மற்றும் முருகேஷ் ஆகியோர் சமூக இணையதளம் மூலம் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.