உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி 1000 பேருக்கு அன்னதானம்

Published On 2022-06-05 16:34 IST   |   Update On 2022-06-05 16:34:00 IST
  • 2 நாட்களாக சாமி வீதி உலா.
  • காப்பு அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்:

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் அம்மன் அலங்கரித்து உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் மறு காப்பு அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

கடந்த 2 நாட்களாக அம்மனை அலங்கரித்து வீதி உலா நடந்து வருகிறது. இன்று செங்குந்தர் சமுதாய கமிட்டி செயலாளர் எஸ்.எம்.சுந்தரம் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பொருளாளர் மார்க்கபந்து, சத்துவாச்சாரி முன்னாள் நகர மன்ற தலைவர் முருகன், கமிட்டி உறுப்பினர்கள் கே.இ. திருநாவுக்கரசு, எஸ்.எம்.செல்வராஜ், எஸ்.டி.மோகன், பார்த்திபன், காலத்தி, எஸ்.லட்சுமணன், எஸ்.பி.ஈஸ்வரன், பி.ராமச்சந்திரன் மற்றும் கவுன்சிலர் சுமதி மனோகரன், முன்னாள் கவுன்சிலர் பி. கிருபானந்தம், பிஎஸ்.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News