உள்ளூர் செய்திகள்

தொரப்பாடி அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கீடு

Published On 2023-07-28 14:43 IST   |   Update On 2023-07-28 14:43:00 IST
  • கண்ணீர் விட்டு கதறி பெண்கள் வாக்குவாதம்
  • விசாரணை நடத்தி அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்

வேலூர்:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தொரப்பாடியில் 160 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மாற்றுத்திறனா ளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

இதற்காக 24 மாற்று திறனாளிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் முன்னிலையில் குழுக்கள் நடந்தது. இதில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது.

இதனை கண்டதும் மற்ற மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மாற்றுத்திற னாளிகளுக்கு 25 வீடுகளுக்கு குலுக்கல் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் 8 பேருக்கு மட்டுமே தற்போது வீடு ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். மற்றவர்களுக்கான வீடு என்ன ஆனது.

உடனடியாக அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையான வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்த மாற்றுத்தி றனாளி பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தங்களுக்கு வீடு கிடைக்காததை எண்ணி அவர்கள் மனமுடைந்தனர்.

அவர்களிடம் உதவி கலெக்டர் கவிதா பேச்சுவார்த்தை நடத்தினார். கரிகிரி பகுதியில் மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன. அதில் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில் :-

தொரப்பாடி அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு இன்று வீடுகள் வழங்குவதற்கான குலுக்கல் நடைபெறும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் 8 பேருக்கும் மட்டுமே வீடுகள் ஒதுக்கீடு செய்து தந்துள்ளனர். மற்ற வீடுகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இது குறித்து முறையான விசாரணை நடத்தி அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் அதிகாரிகள் கூறுகையில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது 8 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு திருநங்கைக்கு ஏற்கனவே வீடு தரப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளை ஒதுக்குவது குறித்து கலெக்டர் முடிவு செய்வார் என்றனர்.

Tags:    

Similar News