உள்ளூர் செய்திகள்

வேலூரில் 2-ம் கட்டமாக எருது விடும் விழா

Published On 2023-02-17 16:03 IST   |   Update On 2023-02-17 16:03:00 IST
  • 42 கிராமங்களுக்கு தேதி ஒதுக்கீடு
  • மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடக்கிறது

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெறும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரைமாவட்டத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

இதற்காக விழாக் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். அப்படி அனு மதி பெற்ற இடங்களில் மட்டுமே விழா நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் 78 கிராமங்களில் விழா நடத்த அனுமதிக்க வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது.

இதில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முதல்கட்டமாக இம்மாதம் வரை 43 கிராமங்களில் விழா நடத்த அனுமதிக் கப்பட்டது. அதன்படி இதுவரை சுமார் 30 கிராமங்களில் விழா நடந்துள்ளது.

இதையடுத்து, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த கிராமங்களுக்கு தேதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் (பொறுப்பு), ஆர்டிஓ பூங்கொடி, கூடுதல் எஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள், விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது 42 கிராமங்களில் விழாக்கள் நடத்த தேதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில விழாக்குழுவினர் தங்கள் கிராமத்துக்கு சில தேதிகளை குறிப்பிட்டு அன்று நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்மீது பரிசீலனை செய்து அவர்க ளுக்கு தேதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

42 கிராமங்களில் மார்ச் 1 ந் தேதி முதல் ஏப்ரல் 10 ந் தேதி வரை விழாக் கள் நடத்துவதற்கு அரசாணை பெறுவத ற்கு விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக் கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News