உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. நிர்வாகியை தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன், மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே அப்பு, வேலழகன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் ஆகியோர் சந்தித்து வெளிவந்த காட்சி.

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. நிர்வாகியுடன் பிரமுகர்கள் சந்திப்பு

Published On 2023-04-10 15:17 IST   |   Update On 2023-04-10 15:17:00 IST
  • தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர், மாவட்ட செயலாளர்கள் சென்றனர்
  • அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டிருந்தார்

வேலூர்:

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறான பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவதூறான பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக பொள்ளாச்சி அருண்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமாரை பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரையின்படி மதுரை மண்டல அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் வேலூர் கோர்ட்டில் அருண்குமாருக்கு ஜாமீன் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News