உள்ளூர் செய்திகள்

கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த காட்சி.

சுற்றுலா மாளிகையில் ரூ.7.65 கோடியில் கூடுதல் கட்டிடம்

Published On 2023-05-26 14:46 IST   |   Update On 2023-05-26 14:46:00 IST
  • அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
  • 8 மாதத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை

வேலூர்,

வேலூர் சுற்றுலா மாளிகையில் ₹7.65 கோடியில் கூடுதல் கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் சுற்றுலா மாளிகையில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த ஆண்டு வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தோடு அதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்ப பொதுப்ப ணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிகாரிகள் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான நிதி, வரைப்படத்தை அறிக்கையாக தயாரித்து அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இப்பணிகள் 8 மாதத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் பணிகளை விரைந்தும், தரமாக கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கர்லிங்கம், செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் ராஜாமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7.65 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. கூடுதல் கட்டிடம் 1260 சதுர மீட்டரில் தரைத்தளம், முதல் தளத்தில் 6 விஐபி அறைகள், லிப்ட் உள்ளிட்ட வசதியுடன் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. பணிகள் விரைந்து செய்து முடிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News