உள்ளூர் செய்திகள்

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை

Published On 2023-08-01 15:20 IST   |   Update On 2023-08-01 15:20:00 IST
  • நகரமன்றத்தின் அவசரக் கூட்டம்
  • நகராட்சி தலைவர் எச்சரிக்கை

குடியாத்தம்:

குடியாத்தம் நகரமன்றத்தின் அவசரக் கூட்டம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஆணையாளர் எம்.மங்கையர்க்கரசன், பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் துவங்கியவுடன் நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர ராஜன் பேசுகையில்:-

குடியாத்தம் நகரில் உள்ள பல கடைகளின் பெயர்பலகைகள் தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ளது உடனடியாக 3 மாதத்திற்குள் அனைத்து பெயர்ப்பலகைகளிலும் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், சலவை தொழிலாளர்கள் நலன்கருதி சுண்ணாம்பேட்டை சுடுகாடு அருகே அவர்களுக்கு சலவைத்துறை கட்டித்தரப்படும், ஆற்றில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வரி விதிப்பிற்கு பணம் கேட்டால் இது குறித்து நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதி இன்றி முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சி இடத்தில் அரசு அலுவலகம் கட்ட அதிகாரிகள் ஆய்வு குறித்து எந்த தகவலும் வரவில்லை.

அது குறித்து முறைப்படி தகவல் வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

Tags:    

Similar News