உள்ளூர் செய்திகள்
மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்
- போக்சோவில் கைது
- திருமணம் செய்வதாக ஏமாற்றினார்
வேலூர், ஜூலை.2-
காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவரும் காட்பாடி அடுத்த சேனூர் இந்திரா நகரை சேர்ந்த புத்தபிரியன் (வயது 26) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புத்தபிரியன் மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து உள்ளார்.
மைனர் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி புத்த பிரியனை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளதால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என புத்தபிரியனை கட்டாயப்படுத்தி உள்ளார். புத்தபிரியன் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். இது குறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ராணி புத்தபிரியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.