உள்ளூர் செய்திகள்
தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் சாவு
- கட்டுப்பாட்டை இழந்து பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் மகன் கார்த்திக் (வயது 27).
இவர் பைக்கில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருகம்புத்தூர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் திடீரென தறிக்கெட்டு ஓடி சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.