உள்ளூர் செய்திகள்

கிரீன்சர்க்கிளை உடைத்து போடப்பட்ட சாலை மூடப்பட்டுள்ள காட்சி.

கிரீன்சர்க்கிளை உடைத்து போடப்பட்ட சாலை அடைப்பு

Published On 2023-05-11 14:32 IST   |   Update On 2023-05-11 14:32:00 IST
  • வாகன ஓட்டிகள் அவதி
  • மீண்டும் அந்த சாலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்

வேலூர்:

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்து வதற்காக சென்னை மார்க்கமாக வேலூருக்கு வரும் வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு பதிலாக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நேராக அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல் காட்பாடி செல்லும் வாகனங்கள் நேஷனல் தியேட்டர் அருகே இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பெட்ரோல் பங்க் அருகே சென்று சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

கிரீன் சர்க்கிள் அகலம் அதிகமாக இருக்கிறது. அதனை குறைக்க வேண்டும் மேலும் தோட்டப்பாளையம் சென்னை சில்க்ஸ் சர்வீஸ் ரோட்டில் இருந்து வருபவர்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகம் செல்வதற்கு வசதியாக கிரீன் சர்க்கிள் ஒரு பகுதி உடைக்கப்பட்டு அதில் சாலை உருவாக்கப்பட்டது. அதன் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.

இந்த நிலையில் கடந்த முன் 2 நாட்களுக்கு முன்பு அந்தப் பாதையை போலீசார் தடுப்புகளை வைத்து அடைத்துள்ளனர்.

கிரீன் சர்க்கிளை உடைத்து போடப்பட்ட சாலை மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மீண்டும் அந்த சாலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News