உள்ளூர் செய்திகள்

வேலூரில் பட்டப் பகலில் 15 பவுன் நகை பறித்த கும்பல்

Published On 2023-05-11 14:38 IST   |   Update On 2023-05-11 14:38:00 IST
  • குண்டர் சட்டத்தில் கைது
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் தொரப்பா டியைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது 30). இவர் கடந்த மார்ச் மாதம் வேலப்பாடியில் உள்ள வங்கி கிளையில் 15 பவுன் தங்க நகைகளை அடமானம் வைக்க சென்றார்.

அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் லோகேஷ் குமார் வைத்திருந்த நகை பையை பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரம்பலூரைச் சேர்ந்த செந்தில்குமார்(37), சேலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன்(23), திருச்சியைச் சேர்ந்த ராஜசேகர்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன்(21), இவர் 42 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பனமடங்கி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கலெக்டர் குமாரவே ல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, செந்தில்குமார், ஈஸ்வரன், ராஜசேகர், கதிரவன் ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர்.

Tags:    

Similar News