உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஏலம் விடப்பட்ட போது எடுத்த படம். 

ஒடுகத்தூர் பேரூராட்சியில் கட்டண கழிப்பறை, புளியமரம் ஏலம்

Published On 2023-02-25 14:59 IST   |   Update On 2023-02-25 14:59:00 IST
  • மொத்தம் ரூ.3.57 லட்சத்திற்கு குத்தகை ஏலம் விடப்பட்டது
  • போலீசார் பாதுகாப்பு

ஒடுகத்தூர்:

ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமாக 97 புளியமரங்கள், 18 தென்னை மரங்கள், கட்டண கழிப்பறை, பஸ் நிலையம் சுங்க வசூல், தினசரி சந்தை ஆகியவை ஆண்டு தோறும் பேரூராட்சி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டிற்கான பொது ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று ஒடுகத்தூர் பேரூராட்சியில் நடந்தது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமையில் நடைப்பெற்ற ஏலம் காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில், புளியமரங்கள் ரூ.33,300க்கும், தென்னை மரங்கள் ரூ.4,900க்கும் முதலில் ஏலம் விடப்பட்டது. அதனைத்தொடந்து, பஸ் நிலையம் சுங்க வசூல் ஏலம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 300க்கும், கட்டண கழிப்பறை ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500க்கும் ஏலம் விடப்பட்டது.

அதேபோல், தினசரி சந்தை சுங்க வசூல் குறைந்த அளவிற்கே ஏலம் கேட்டதால் அதனை மறு தேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.3.57 லட்சத்திற்கு குத்தகை ஏலம் விடப்பட்டது.

இதில், வார்டு கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தரப்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News