உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் நகர் மன்ற கூட்டத்தில் வார்டு குழுக்களுக்கு 144 பேர் தேர்ந்தெடுக்க ப்பட்டதற்கான சான்றிதழ்களை அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் சவுந்தரராசன் ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.

குடியாத்தம் நகராட்சியில் வார்டு குழுக்களுக்கு 144 பேர் தேர்வு

Published On 2022-11-02 15:01 IST   |   Update On 2022-11-02 15:01:00 IST
  • ரூ.55 லட்சம் ஒதுக்கீடு
  • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

குடியாத்தம்:

குடியாத்தம் நகரமன்றத்தின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.

நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரப் பகுதியில் சபா கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமித்து, குழு செயலாளர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இந்த குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 144 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை இந்த மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் செம்மையாக நடைபெற நகர் பகுதிகளில் சபா கூட்டங்கள் நடைபெற உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கிராமங்களைப் போன்று நகர்களிலும் சபா கூட்டம் நடத்த உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நகர்மன்ற உறுப்பினர்கள் இந்த குழுக்களுடன் இணைந்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து உடனடியாக நகர மன்ற தலைவர், அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்து அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த குடியாத்தம் நகராட்சிக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து சபை கூட்டங்கள் நடத்த வார்டுகளில் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாளமாக ஒரு உறுப்பினருக்கு நியமனச் சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் ஆகியோர் வழங்கினர்.

Tags:    

Similar News