உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவன மோசடி 14 மணி நேரம் நடந்த அமலாக்கத்துறை சோதனை

Published On 2023-07-07 15:34 IST   |   Update On 2023-07-07 15:34:00 IST
  • தமிழகம் முழுவதும் ரூ 6000 கோடி வசூல் செய்தனர்
  • முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

வேலூர்:

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தமிழகம் முழுவதும் ரூ 6000 கோடி வசூல் செய்தனர். பின்னர் நிதி நிறுவன அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில் வேலூரில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களில் வருவான ஒருவரான ஜனார்த்தனன் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை 9 மணி முதல் சோதனை நடத்தினர் வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் ஜனார்த்தனன் தாத்தா பக்தவச்சலம் வீடு, வேலப்பாடியில் உள்ள உறவினர் நடராஜன் வீட்டிலும், காட்பாடி அடுத்த செங்குட்டையில் உள்ள சிஎம் ஜான் தெருவில் உள்ள ஜனார்தனின் மாமனார் வீட்டிலும் டெல்லி மற்றும் சென்னை சேர்ந்த அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த குழுவில் ஒரு வங்கி அதிகாரி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர் இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

14 மணி நேரம்

வேலப்பாடியில் உள்ள நகைக்கடையில் இரவு 11 மணி வரை அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 14 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அமலாக்க துறை அதிகாரிகள் ஐ.எப்.எஸ்.நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் மற்றும் ஏஜென்ட்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டசம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News