உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் இருந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மனுக்களை பெற்ற காட்சி

பி.எப்.அலுவலகம் அருகே 10 மரங்கள் வெட்டி கடத்தல்

Published On 2023-08-09 15:37 IST   |   Update On 2023-08-09 15:37:00 IST
  • போலீசார் மீது எஸ்.பி.யிடம் புகார்
  • நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

வள்ளலாரை சேர்ந்த ரமேஷ் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

வள்ளலார் பிஎப் அலுவலக சாலையில் அரசுக்கு சொந்தமான 10 மரங்கள் இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி மர்ம நபர்கள் மரங்களை வெட்டி எடுத்துச் சென்றனர்.

இது குறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தால் அவர்கள் வீட்டு வசதி வாரிய அலுவலகத்துக்கு சொந்தமான மரங்களை வெட்டியதாக தெரிவிக்கின்றனர்.

சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர்.

எனவே மரம் வெட்டியவர்கள் மீதும் குற்றவாளிகளுக்கு துணை போகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

Tags:    

Similar News