உள்ளூர் செய்திகள்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் 4 மாதத்தில் முடியும்- அமைச்சர் தா.மோ அன்பரசன் பேட்டி

Published On 2023-03-13 15:22 IST   |   Update On 2023-03-13 15:22:00 IST
  • வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரெயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்ல தயார் நிலையில் உள்ளது.
  • ரெயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

ஆலந்தூர்:

ஆலந்தூர் மண்டலம் சார்பில் ரூ.50 கோடியே 89 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. மண்டல குழு தலைவர் என். சந்திரன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரெயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்ல தயார் நிலையில் உள்ளது. இன்னும் 3 முதல் 4 மாதத்திற்குள் பரங்கிமலை வரை முழுவதுமாக கட்டி முடிக்கப்படும். வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல அலுவலர் பாஸ்கரன், வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், நடராஜன், ஆலந்தூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதாபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News