உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல்

Published On 2023-07-05 15:53 IST   |   Update On 2023-07-05 15:53:00 IST
  • ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் இல்லாததால், இது போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
  • டிராபிக் போலீசாரை பணியமர்த்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியானது, கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, சேலம் வேலூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

மேலும், ஊத்தங்கரை பகுதியில் உள்ள, பள்ளி கல்லூரி வாகனங்கள் செல்லும் நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் வருவதால், ஊத்தங்கரை நகர் பகுதியில் இருசக்கர வாகனங்கள், மற்றும் கார் போன்றவை போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் இல்லாததால், இது போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஊத்தங்கரை ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னல் அமைத்து, டிராபிக் போலீசாரை பணியமர்த்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊத்தங்கரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News