உள்ளூர் செய்திகள்

லாலி ரோடு பகுதியில் சிக்னல் இல்லாமல் சாலையை கடக்கும் வாகனங்கள்

Published On 2023-01-20 14:47 IST   |   Update On 2023-01-20 14:47:00 IST
  • போக்குவரத்து போலீசாரின் இந்த ஏற்பாட்டுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
  • காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

வடவள்ளி

கோவை தடாகம் சாலையில் லாலி ரோடு சிக்னல் உள்ளது. மருதமலை, தடாகம், காந்திபார்க், மேட்டுப ்பாளையம் சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இந்த பகுதி உள்ளது.

இந்த சாலையில் கடக்கும் வாகனங்கள் சிக்னலில் மிக நீண்ட தூரம் காத்திருக்கின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

இதனால் தடாகம்- மருதமலை, லாலி ேராடு பகுதிகளில் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த பகுதிகளில் சிக்னல் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சிறிய ரவுண்டானா போன்று அமைக்கப்பட்டது.

இதன் மூலம் காந்தி பார்க் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மருதமலை செல்லவும், தடாகம் செல்லக்கூடிய வாகனங்கள் ெசல்லும் பாதையும் மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முன்பு போல் காத்திருக்காமல் உடனே செல்கின்றனர்.

நேற்று மாலை முதல் தொடரப்பட்ட இந்த வெள்ளோட்டம் வெற்றி அடைந்திருப்பதாக போக்குவரத்து துறையும், நெடுஞ்சாலைத்துறை யினரும் தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த வெள்ளோட்ட பணியானது போக்குவரத்து துறை துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி ஆகியோர் ஏற்பாட்டில் நடை பெற்றது. இதே போன்று சிந்தாமணி பகுதியிலும் போக்குவரத்து வெள்ளோட்டம் பார்க்கப் பட்டு வருகிறது.

Tags:    

Similar News