உள்ளூர் செய்திகள்
சாலையோரத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்.
அய்யலூர் அருகே 4 வழிச்சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்
- திருச்சி மார்க்கெட்டில் இருந்து பழனிக்கு வாழை ப்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் வந்தது.
- நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வடமதுரை:
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது32). டிரைவர். இவர் திருச்சி மார்க்கெட்டில் இருந்து பழனிக்கு வாழை ப்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தில் வந்தார்.
திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே கொல்லப்பட்டி பகுதியில் வந்து கொண்டி ருந்தபோது மீன் ஏற்றி வந்த லாரி சரக்கு வாகனத்தின் பின்னால் ேமாதியது.
இதில் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் தர்ம ராஜை வடமதுரை போலீ சார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய மீன் லாரியை ஓட்டி வந்த நாகபட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.