புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி தருமபுரி உழவர் சந்தையில் இன்று காலை காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் ரூ.11.67 லட்சத்திற்கு விற்பனை
- 2000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
- 43 டன் 894 கிலோ காய்கறிகள் ரூ.11, லட்சத்து 67 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உழவுத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் கத்தரி, வெண்டை, அவரை, பூசணி, வெள்ளை பூசணி, முருங்கைக்காய், முள்ளங்கி, கோவைக்காய்,கேரட் பீன்ஸ், சுரைக்காய், புட லங்காய், பாகற்காய், கொத்தமல்லி இலை, புதினா, கருவேப்பிலை என அனைத்து வகை காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் தருமபுரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உழவர்கள் தினசரி காய்கறிகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளுக்கும் தருமபுரி மாவட்ட வேளாண்துறை மூலம் காய்கறிகளை கொண்டு வந்து நேரடியாக நுகர் வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி உழவர் சந்தை யில் நாள் ஒன்றுக்கு 3 டன் முதல் 4 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 2000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
அந்த வகையில் பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் இன்று தருமபுரி உழவர் சந்தைக்கு 8,779 நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதில் 43 டன் 894 கிலோ காய்கறிகள் ரூ.11, லட்சத்து 67 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.