உள்ளூர் செய்திகள்

புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்

வீரனார் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-17 10:06 GMT   |   Update On 2022-09-17 10:06 GMT
  • கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
  • மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மெலட்டூர்:

மெலட்டூர் அருகே உள்ள காவளூர் கிராமத்தில் வீரனார் கோவில் திருப்பணி இளங்கோவன், சௌந்தராஜன், தீபக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் உதவியுடன் நடைபெற்று வந்தது. திருப்பணி முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவளூர் ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News