உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலிலில் அஷ்டமி வழிபாடு நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள் திரளாககலந்து கொண்டனர்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அஷ்டமி தின வழிபாடு

Published On 2022-06-08 16:02 IST   |   Update On 2022-06-08 16:02:00 IST
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அஷ்டமி தோறும் சிறப்புவழிபாடுநடைபெறுவது வழக்கம்.
  • அதேபோல வளர்பிறை அஷ்டமி தினமான இன்று சிறப்புவழிபாடு நடைபெற்றது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அஷ்டமி தோறும் சிறப்புவழிபாடுநடைபெறுவது வழக்கம். அதேபோல வளர்பிறை அஷ்டமி தினமான இன்று சிறப்புவழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மூலவர் சாமி, அம்பாள் மற்றும் கால பைரவருக்கு  மஞ்சள்பொடி, திரவியபொடி, வில்வப் பொடி, அருகம்புல்பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்நடைபெற்றது.

பின்னர் வடைமாலை மற்றும் செவ்வரளி மலர்அலங்காரத்தில் பைரவாஸ்டகம் முழங்க மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக் கடனுக்காகவும் விளக்கேற்றி சாமிதரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கு அஷ்டமி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடுசெய்திருந்தனர். முன்னதாகவராகி அம்மன்சன்னதியில் சிறப்புவழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர்சிறப்புஅலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது.

Tags:    

Similar News