உள்ளூர் செய்திகள்

சுந்தர விநாயகர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்ற காட்சி.

இடையர்காடு கிராமத்தில் சுந்தர விநாயகர்கோவில் வருசாபிஷேகம்

Published On 2023-04-26 08:54 GMT   |   Update On 2023-04-26 08:54 GMT
  • இடையர்காடு கிராமத்தில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
  • இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு நிறைகொடை பூஜையும் ,தீபாராதனையும் நடைபெற்றது.

தென்திருப்பேரை:

இடையர்காடு கிராமத்தில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா மற்றும் கிழக்கத்தியான் சுவாமி கோவில் கொடை விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

அன்று இரவு திருவிளக்கு விளக்கு பூஜையும், அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று காலை 8 மணிக்கு சுந்தர விநாயகருக்கு மகா கணபதி பூஜை, சங்கல்பம், புண்யாக வாஜானம், கும்ப பூஜை, வேத பாராயணம், கோபுர கலச அபிஷேகம் ,தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

சுந்தர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீமதி தியாகராஜன் சொற்பொழிவு நிகழ்ச்சியும் ,இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

இரவு 10 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி மற்றும் செங்கிடா சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு கிழக்கத்தியான் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை, தீபாராதனையுடன் சாமகொடையும் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு நிறைகொடை பூஜையும் ,தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News