உள்ளூர் செய்திகள்

டி.ஜே.ஆர். நிறுவனத்தின் தலைவர் தேவேந்திரனுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.

வள்ளியூர் டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் 10-ம் ஆண்டு விழா

Update: 2022-08-15 09:19 GMT
  • வள்ளியூர் டி.ஜே.ஆர். நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழா வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
  • வாடிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர்.

வள்ளியூர்:

வள்ளியூர் டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வள்ளியூர், நெல்லை மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் கட்டுமான துறையில் உள்ள வள்ளியூர் டி.ஜே.ஆர். நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழா வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

நிறுவனத்தின் தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கி வரவேற்றார். நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக டி.வி. நடிகை அன்னபாரதி, பின்னணி பாடகி அலைனா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவன தலைவர் தேவேந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News