ஓசூரில் வள்ளலார் முப்பெரும் விழா
- வள்ளலார் 200 முப்பெரும் விழா, நேற்று நடைபெற்றது,
- விழாவையொட்டி, சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூரில், இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில், வள்ளலார் 200 முப்பெரும் விழா, நேற்று நடைபெற்றது,
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை பரப்புரை மேற்கொண்ட சன்மார்க்க சங்க அடியார்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.
முன்னதாக வள்ள லாரின் சிறப்பை விளக்கும் வகையில், ஓசூர் பண்டாஞ்சநேயர் கோயில் அருகிலிருந்து விழா மண்டபம் வரை பேரணி நடைபெற்றது.
மேலும் விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, சப்- கலெக்டர் சரண்யா, இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் குமரேசன், ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, தாசில்தார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.