உள்ளூர் செய்திகள்

நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.

கீழ்வேளூர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த நாய்களுக்கு தடுப்பூசி

Published On 2023-03-18 08:55 GMT   |   Update On 2023-03-18 08:55 GMT
  • வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்தது.
  • கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 200 நாய்களை பிடித்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் சாலையில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. குறிப்பாக.

கீழ்வேளூர் 4-வது வார்டு பகுதியில் வெள்ளந்திடல், பிள்ளை தெருவாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிந்தன.

இந்த நாய்கள் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்களை விரட்டி சென்று கடித்து வந்தன.

மேலும் சாலைகளில் நடந்து சென்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்து வந்தது.

ஆடுகளை கடித்து குதறின வயல்வெளி பகுதிகளில் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடுகளை, நாய்கள் கடித்து குதறி வந்தன.

வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளையும் வேட்டையாடி வந்தன.

வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்தது.

இதில் காயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற பணியாளர்கள் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

இதை ெதாடர்ந்து அவர்கள் கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 200 நாய்களை பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கால்நடை துறையினர் மூலம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சாலைகள் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.

Tags:    

Similar News