ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை பற்றும் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிக்கு சான்றிதழை கல்லூரியின் நிறுவனர் சந்திரசேகரன் வழங்கினார்.
ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் வளாகத் தேர்வு சாதனையாளர்கள் நிகழ்ச்சி
- வளாகத் தேர்வில் தேர்வான 479 மாணவர்களுக்கு பணி ஆணைக் கடிதங்களை வழங்கியுள்ளனர்.
- கணிதத் துறைத் தலைவர்கள் ராகவன், சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு வேலைவாய்ப்பு சாதனையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலர் சந்திரசேகரன் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வளாகத் தேர்வில் தேர்வான 479 மாணவர்களுக்கு பணி ஆணைக் கடிதங்களை வழங்கி தலைமை உரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் பாலசுப்பி ரமணியன் துணை முதல்வர் குணசேகரன் மற்றும் கணிதத் துறைத் தலைவர்கள் ராகவன், சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் வளாகத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரகாஷ் வரவேற்றார், கல்லூரியின் வளாகத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயற்பியல் துறைப் பேராசிரியர் தம்பிதுரை வேலைவாய்ப்பு சாதனையாளர் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.