உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை ஆலஏரி ஆக்கிரமிப்பை அகற்றி அளவிட வேண்டும்
- தொடர் மழையில் காரணமாக ஏரி நிரம்பி 12 கிராம பாசன விவசாயி களும், பொது மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
- ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் பரப்பளவை அளவீடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு ஊராட்சியில் ஆலஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையில் காரணமாக ஏரி நிரம்பி 12 கிராம பாசன விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நீர்வரத்து பாதை அடைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் பரப்பளவை அளவீடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.