உள்ளூர் செய்திகள்

மடப்பட்டு அருகே கார் மீது உரசி மினி லாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

Published On 2023-06-23 15:23 IST   |   Update On 2023-06-23 15:23:00 IST
  • சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கணவன் மனைவி காரில் சென்று கொண்டிருந்தனர்.
  • முன்னால் சென்ற கார் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

கள்ளக்குறிச்சி:

புதுவையில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு மினி லாரி தூத்துக்குடி நோக்கி சென்றது. இந்த மினி லாரியை புதுவை தேங்காய்திட்டை சேர்ந்த தீனதயாளன் (வயது 30) ஓட்டிச் சென்றார். இந்த மினி லாரி இன்று காலை 10.50 மணியளவில் மடப்பட்டு மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரிக்கு முன்னால், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கணவன் மனைவி காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த காரை மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி முந்த முயன்றது. அப்போது கார் மீது மினி லாரி உரசியது. இதில் நிலை தடுமாறிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற கார் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற கணவன், மனைவி, மினி லாரி டிரைவர் படுகாயமடைந்தனர். அப்பகுதி இளைஞர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News