உள்ளூர் செய்திகள்

ஓசூர் கிளை நூலகத்தில் மாணவருக்கு, வாசகர் வட்டம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நினைவு பரசு வழங்கபட்ட போது எடுத்த படம். 

யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற ஓசூர் மாணவருக்கு பாராட்டு விழா

Published On 2023-06-22 13:11 IST   |   Update On 2023-06-22 13:11:00 IST
  • போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் ஏராளமான மாணவ மாணவியர் இங்கு வந்து நூல்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.
  • வெற்றி பெற்ற மாணவருக்கு வாசகர் வட்டம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கிளை நூலகத்தில் யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட எல்லாவித தேர்வுகளும் எழுத மேற்கோள் நூல்கள் அடங்கிய தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் ஏராளமான மாணவ மாணவியர் இங்கு வந்து நூல்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை வாசித்து தேர்வெழுதிய கார்த்திக் விஜய் என்ற ஓசூர் மாணவர், யு.பி.எஸ்.சி. தேர்வெழுதி, இந்திய அளவில் 551-வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.எஸ், ஐ.பி.எஸ். பணிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர், கோவை வேளாண் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஓசூர் கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை படித்து யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

ஓசூர் கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதால், அந்த மாணவருக்கு, வாசகர் வட்டம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாசகர் வட்ட தலைவர் கருமலைத்தமிழாழன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெகந்நாதன், மகளிரணி தலைவர் மணிமேகலை, செயற்குழு உறுப்பினர் புருசப்பன் ஆகியோர் மாணவரை பாராட்டி பேசினர். மேலும் அவருக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. பின்னர், மாணவர் கார்த்திக் விஜய் ஏற்புரை நிகழ்த்தினார். இதில் மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, நூலக அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில், நூலகர் ரேணுகா சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News