உள்ளூர் செய்திகள்

வருகிற 12-ந்தேதி திருச்சி திருமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்-இந்து சமய அறநிலையத்துறை

Published On 2024-07-09 11:51 IST   |   Update On 2024-07-09 11:51:00 IST
  • சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் கோவிலுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி அன்று குடமுழுக்கு நடை பெறுகிறது.

இதற்கான குடமுழுக்கு பணிகள் மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் குடமுழுக்கு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

கடந்த 07.5.2021 முதல் 8.7.2024 வரை தமிழ்நாட்டில் 1,844 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.5,097 கோடி மதிப்பீட்டிலான 20,166 திருப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 7,648 திருப்பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News