சாயும் நிலையில் உள்ள இரும்பு தடுப்புகள்.
சாயும் நிலையில் இரும்பு தடுப்புகள்: விபத்து ஏற்படும் அபாயம்!
- திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பாதையில் உறுதி தன்மையற்ற இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
- சாயும் நிலையில் உள்ள இரும்பு தடுப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாச்சலூர், கே.சி.பட்டி மலைப்பாதையில் தடுப்பு சுவர்கள் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி சில வாரங்களாக நடந்து வருகிறது. இவை உரிய வழிகாட்டுதல், விதிமுறை ப்படி அமைக்காமல் உறுதியற்ற நிலையில் அமைக்கப்படுகிறது. இது போன்ற தடுப்புகள் விபத்துக்களை தவிர்க்குமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.
பெரும்பகுதியான இட ங்களில் உறுதி த்தன்மையற்ற முறையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றின் அருகில் நிற்கும் பயணிகள் சாயும் போது இவை விழும் நிலையில் பலவீனமாக உள்ளது. இரும்பு தடுப்புகள் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.