உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி பியூஸ் கோயல் (கோப்பு படம்)

பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல- மத்திய மந்திரி பேச்சு

Published On 2022-10-16 08:30 GMT   |   Update On 2022-10-16 08:30 GMT
  • தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்.
  • தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tags:    

Similar News