உள்ளூர் செய்திகள்

மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட காட்சி.


பாளை தியாகராஜநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-12-13 09:45 GMT   |   Update On 2022-12-13 09:45 GMT
  • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

பாளை தியாகராஜநகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

12-வது வார்டு கவுன்சிலரும், பணி நியமன குழு உறுப்பின ருமான கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில் திலக் நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 12- வது வார்டுக்கு உட்பட்ட சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News